மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை சிறுபோக நெற் செய்கை 38,274 ஹெக்டேர் மேற்கொள்ளப்பட உள்ளது
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டுக்கான சிறுபோக வேளாண்மை செய்கைகாண ஆயத்தப் பணிகள் தற்போது விவசாயிகளினால் படுவான்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
ஜனாதிபதியின் விசேட உத்தரவின் பெயரில் கிழக்கு மாகாணத்தில் விவசாய அமைச்சினால் விவசாயிகளுக்குரிய பசலைகளை தங்கு தடை இன்றி வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளும் மாவட்ட உர செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதை அடுத்து
மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது விவசாய காணிகளை உள வடித்தல் வரம்பு காட்டுதல் நீர்ப்பாசன வாய்க்கால்களை துப்புரவு செய்தல் பாதுகாப்பு வேலி அமைத்தல் போன்ற முன்னாயத்த பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்
இம்முறை மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு சிறு போக நெற்செய்கைக்கு தேவையான 7234 மெட்ரிக் தொன் யூரியா 1078 மெட்ரிக் தொன் TSP 1709 மெட்ரிக் தொன் MOP உரப்பசலைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது













