ஈரானியத் தாக்குதல்களுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளுக்காக, மேலதிக பிரிட்டிஷ் வீரர்களும், அதிக இங்கிலாந்து வான் பாதுகாப்பு அமைப்புகளும் மத்திய கிழக்குக்கு அனுப்பப்படவுள்ளன.
இதன்மூலம், வளைகுடா மற்றும் சைப்ரஸின் பாதுகாப்பில் ஈடுபடும் இங்கிலாந்து வீரர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 1,000 ஆக உயரும் என்று கூறப்படுகிறது.
ஈரானிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்குப் பதிலளிக்கும் விதமாகவே இந்தக் கூடுதல் படைக் குவிப்பு மேற்கொள்ளப்பட்டதாக கட்டாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்தின் தேசியப் பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி குறிப்பிட்டார்.
மேலும், சவுதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்குக் மேலதிக வான் பாதுகாப்புப் படைகளும் அமைப்புகளும் அனுப்பப்படும் என்றும், கட்டாரின் டைஃபூன் ஜெட் விமானங்களின் பயன்பாடு நீட்டிக்கப்படும் என்றும் வளைகுடா நாடுகளுக்கான தனது பயணத்தின்போது பேசிய பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி குறிப்பிட்டார்.
ஈரானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் இங்கிலாந்து ஈடுபட மறுப்பது குறித்து டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பாசாங்கு செய்து வரும் நிலையில் ஜோன் ஹீலியின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.














