நாடு முழுவதும் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட “ முழு நாடும் ஒன்றாக ” தேசிய செயற் திட்டத்தின் கீழ், போதைப்பொருள் ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு நடந்த விசேட நடவடிக்கைகளில் மொத்தம் 906 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அறிக்கையின் படி,
சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணைகள் 12 நபர்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், தடுப்பு ஆணையின் கீழ் 15 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது 592 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், குற்றச் செயல்களில் நேரடியாக தொடர்புடைய 4 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், 229 தேடப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் 121 திறந்த பிடியாணைகள் கொண்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து சட்டங்களை மீறியவர்களுக்கும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மதுபோதையில் வாகனம் செலுத்திய 142 பேர் மற்றும் அபாயகரமாக வாகனம் செலுத்திய 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிகமாக பல்வேறு போக்குவரத்து குற்றச்செயல்களுக்கு 4,486 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.












