நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, பதுக்கை உள்ளிட்ட கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று 12 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும்.
கலகெதர, இரிதா பொல, பின்னவல, வேவல்பனாவ, பிடும்பே, மீப்பே, மாவத்தகம, பாதுக்மை, உடுமுல்ல, அருக்வத்த, வேரகல, போப்பே, மலகல, கஹவல, மில்லவ, கொட்டியங்கொட, போரகெதர, அங்கம்பிட்டிய, அங்கம்மன, மீரியகல்ல மற்றும் யடவத்துர ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்.
நீடித்த வறட்சியின் காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக குறைந்ததால், லபுகம மற்றும் கலதுவாவ சுத்திகரிப்பு நிலையங்களில் நீர் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.
நீர் வெட்டினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், முன்கூட்டியே போதுமான தண்ணீரைச் சேமித்து வைத்து, விநியோகத் தடை காலத்தில் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












