வட அயர்லாந்தின் லர்கன் (Lurgan) பகுதியில் உள்ள காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக 48 வயதுடைய நபர் ஒருவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சுமார் ஆறு வாரங்களுக்கு முன்பு, முகமூடி அணிந்த இருவர் உணவு விநியோகம் செய்யும் ஓட்டுநர் ஒருவரின் வாகனத்தைக் கடத்தி அந்த ஓட்டுநரின் வாகனத்தில் வெடிகுண்டை ஏற்றி , அதனைப் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லுமாறும், தவறினால் அவர் கொல்லப்படுவார் என்றும் மிரட்டியிருந்தனர்.
இந்தச் சம்பவத்தின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள சுமார் 100 வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நபர், இன்று (மே 8) கிரெய்காவன் (Craigavon) நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இதேவேளை, இத்தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வரும் துப்பறியும் அதிகாரிகள், பொலிஸாரின் விசாரணைக்குத் தடையாக இருந்ததாகக் கூறி கடந்த புதன்கிழமை பெண் ஒருவர் மீது குற்றஞ்சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.














