தேசிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே ஜயசுந்தர பயணித்த கெப் ரக வாகனம், முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து ஹினிதும, ஹபரகடை பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியூம் 8 வயது சிறுவனும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற போது, பாராளுமன்ற உறுப்பினரின் சாரதியே காரைச் செலுத்தியிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, விபத்துத் தொடர்பாகக் காரின் சாரதி ஹினிதும பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.














