விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராட சென்று நீரில் மூழ்கி 3 பேர் உரிழந்துள்ளனர்.
இன்றைய (17) தினம் தெல்தெனிய – பம்பரகல விகாரைக்கு அருகில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடுவதற்கு நான்கு இளைஞர்கள் சென்றுள்ளனர்.
அவர்கள் நீராடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
இதனையடுத்து பிரதேச மக்களுடன் பொலிஸார் இணைந்து தேடுதல் நடத்திய நிலையில் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், ஏனைய மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.














