அண்மைய கனமழையால் விளை நிலங்கள் சேதமடைந்த விவசாயிகள் 14 நாட்களுக்குள் தத்தமது கமநலக் காப்புறுதிச் சபையில் இழப்பு அறிக்கைகளைத் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மதிப்பீடுகளைத் தொடர்ந்து, சேதத்தின் அளவைப் பொறுத்து இழப்பீடு வழங்கப்படும் என கமத்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
நெல், மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, சோயா, மிளகாய் மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கு ஒரு ஹெக்டேருக்கு வழங்கப்படும் தொகை அதிகபட்சமாக ரூ. 1,00,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் பல மாவட்டங்களில் நிலவிய பாதகமான குறைந்த காற்றழுத்த வானிலை காரணமாக சாகுபடி நிலங்கள் நீரில் மூழ்கி, பயிர்கள் ஆரம்ப நிலையிலேயே சேதமடைந்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.













