வைரலான மோடி – மெலோனி “மெலோடி” தருணத்தால் தூண்டப்பட்ட பங்கு ஏற்றத்தால் இந்திய பன்னாட்டு உணவு நிறுவனமான
பார்லே இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் இன்று (22) தங்களது கூர்மையான ஏற்றத்தைத் தொடர்ந்தன.
அதன்படி, பார்லே இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமை அன்று 4.90% உயர்ந்து ரூ. 5.78-ஐ எட்டியது.
இது, 2025 மே மாதத்தில் எட்டப்பட்ட அதன் 52 வார உச்சபட்ச விலையான 17.44 ரூபாவுக்கு அருகில் உள்ளது.
அந் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ. 28.23 கோடியாக உள்ளது.
இந்த வாரத் தொடக்கத்தில் சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்த மெலடி டொஃபிகளுக்கும், பார்லே இண்டஸ்ட்ரீஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற போதிலும், இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தனது இத்தாலி பயணத்தின் போது, இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு மெலடி டொஃபிகளைப் பரிசளித்ததை அடுத்து இந்த பரபரப்பு தொடங்கியது.
இது தொடர்பான காணொளி விரைவாக வைரலாகி, மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று, இணையத்தில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் பின்ன, “பார்லே” என்ற வர்த்தகப் பெயர் குறித்த குழப்பத்தின் காரணமாக, சில்லறை முதலீட்டாளர்கள் பார்லே இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்க விரைந்ததாகத் தெரிகிறது.
இருப்பினும், மெலடி டொஃபிகள் உண்மையில் பார்லே ப்ராடக்ட்ஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன; அது பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத மற்றும் வர்த்தகம் செய்யப்படாத ஒரு நிறுவனமாகும்.
கடந்த சில அமர்வுகளாக அதன் பங்குகள் கடுமையாக உயர்ந்து வரும் பார்லே இண்டஸ்ட்ரீஸ், முற்றிலும் தனிப்பட்ட ஒரு பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும், மேலும் மெலடி சாக்லேட்ஸுடன் அதற்கு அறியப்பட்ட எந்த வணிகத் தொடர்பும் இல்லை.















