கைப்பந்தாட்டம், கேரம் மற்றும் ஹாக்கி ஆகிய மூன்று தேசிய விளையாட்டு சங்கங்கள்/ கூட்டமைப்புகளின் பதிவை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யும் வர்த்த்மானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவினால் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
சங்கங்கள் அல்லது கூட்டமைப்பு முறையான நிர்வாகத்தை உறுதி செய்வதற்கும், விளையாட்டுச் சட்டத்திற்கு இணங்க அவற்றின் அரசியலமைப்புகளைத் திருத்துதல் மற்றும் புதிய அலுவலகப் பொறுப்பாளர்களை நியமிப்பதற்கான தேர்தல்களை நடத்துதல் உள்ளிட்ட முக்கிய செயல்முறைகளை நிறைவு செய்வததையும் நோக்காகக் கொண்டு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மே 19 முதல் அமலுக்கு வரும் வகையில், இடைநீக்கம் செய்யப்பட்ட சங்கங்கள் அல்லது கூட்டமைப்புகளின் விவகாரங்களைக் கண்காணிக்கும் தகுதிவாய்ந்த அதிகாரியாக, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளரை அமைச்சர் நியமித்துள்ளார்.
திருத்தப்பட்ட சட்ட விதிகளின் கீழ் நடைபெறும் ஆண்டுப் பொதுக் கூட்டங்களில் புதிய அலுவலகப் பொறுப்பாளர்கள் முறையாகத் தேர்ந்தெடுக்கப்படும் வரை, சங்கங்களின் பணிகளைச் செய்து நிர்வகிக்கும் அதிகாரங்கள் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளன.















