செம்மணி மனித புதைகுழியில் இருந்து 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சிசுக்கள், சிறுவர்களுடைய என்புக்கூடுகள் உட்பட 7 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 21ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் நடைபெற்றது.
இன்றைய அகழ்வின் போது 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 4 சிறுவர்களுடைய என்புக்கூடும் , 2 சிசுக்களின் என்புக்கூடுகள் உட்பட்ட 7 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
அதனடிப்படையில் 339 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 318 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.












