முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
2026.06.21 அன்று காலை, பன்சியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரம்பே–மெல்சிறிபுர பிரதான வீதியின் ரம்பே சந்திப்பு அருகிலுள்ள எதிர் திசை வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மெல்சிறிபுர பகுதியிலிருந்து ரம்பே நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்திசையிலிருந்து வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், பொல்பிதிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்திருந்தார்.
உயிரிழந்தவர் 79 வயதுடைய பன்சியகம பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்சியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.














