எதிர் வரும் வாரங்களில் கத்தார் தனது இயற்கை எரிவாயு உற்பத்தியை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும் என கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானி தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு போர் காரணமாக ஈரான் நடத்திய தாக்குதல்களால் கத்தாரின் ‘ராஸ் லஃபான்’ எரிவாயு முனையம் சேதமடைந்தது.
இதன் விளைவாக, அரசுக்குச் சொந்தமான ‘கத்தார் எனர்ஜி’ நிறுவனத்தால் ஒப்பந்தத்தின்படி எரிவாயுவை வழங்க முடியவில்லை.
தற்போது, சேதமடைந்த பகுதியைத் தவிர ஏனைய அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளும் சில வாரங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகின் மொத்த எரிவாயு ஏற்றுமதியில் 20% பங்களிப்பை கத்தார் கொண்டுள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தங்களுக்குப் பின்னர், எதிர் வரும் வாரங்களில் கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என கத்தார் பிரதமர் நம்புவதாகக் கூறப்படுகிறது.















