தவிர்க்கக்கூடிய மருத்துவ சிகிச்சைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் குறித்து உடனடி முடிவு எடுக்குமாறு பிரிட்டன் அரசுக்கு நோயாளர் பாதுகாப்பு அமைப்புகளும் பிரச்சாரக் குழுக்களும் வலியுறுத்தியுள்ளன.
இங்கிலாந்தின் நோயாளர் பாதுகாப்பு ஆணையராக உள்ள பேராசிரியர் ஹென்றியட்டா ஹியூஸ் தயாரித்த ஹியூஸ் அறிக்கை, இடுப்புப் பகுதி உறுப்பு சரிவு மற்றும் சிறுநீர் அடக்கமின்மைக்கு பயன்படுத்தப்பட்ட பெல்விக் மெஷ் (Pelvic Mesh) பொருத்துதல்கள் மற்றும் சோடியம் வால்புரோயேட் (Sodium Valproate) என்ற வலிப்பு நோய் மருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு கட்டங்களைக் கொண்ட இழப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்த பரிந்துரைத்தது.
இந்த அறிக்கை வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும், அரசின் நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை என பேராசிரியர் ஹியூஸ் ஏமாற்றம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது விருப்பமான விடயம் அல்லஇ நீண்ட காலமாக தாமதமாகிவிட்ட கடமையாகும் என்று பிரச்சார அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
1998 முதல் 2020 வரை பிரசவத்திற்குப் பின்னர் ஏற்படும் இடுப்புப் பகுதி உறுப்பு சரிவு மற்றும் சிறுநீர் கசிவு பிரச்சினைகளுக்காக ஆயிரக்கணக்கான பெண்களுக்கு டிரான்ஸ்வஜைனல் மெஷ் பொருத்துதல்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சிலருக்கு கடுமையான வலி, நீடித்த உடல்நல பாதிப்புகள் மற்றும் சிக்கல்கள் ஏற்பட்டதுடன், சில பெண்கள் சிறுநீர்ப்பை அல்லது குடலின் ஒரு பகுதியை அகற்றும் அறுவை சிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டனர்.
இந்த பாதிப்புகளைத் தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை பெல்விக் மெஷ் பயன்பாட்டுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. தற்போது, வேறு சிகிச்சை வழிகள் இல்லாத சந்தர்ப்பங்களில் மட்டுமே இந்த சிகிச்சை இறுதி விருப்பமாக பயன்படுத்தப்படுகிறது.
இங்கிலாந்தின் நோயாளர் பாதுகாப்பு ஆணையராக உள்ள பேராசிரியர் ஹென்றியட்டா ஹியூஸ் தயாரித்த ஹியூஸ் அறிக்கை, இடுப்புப் பகுதி உறுப்பு சரிவு மற்றும் சிறுநீர் அடக்கமின்மைக்கு பயன்படுத்தப்பட்ட பெல்விக் மெஷ் பொருத்துதல்கள் மற்றும் சோடியம் வால்புரோயேட் என்ற வலிப்பு நோய் மருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு கட்டங்களைக் கொண்ட இழப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்த பரிந்துரைத்தது.
இந்த அறிக்கை வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும், அரசின் நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை என பேராசிரியர் ஹியூஸ் ஏமாற்றம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது விருப்பமான விடயம் அல்ல, நீண்ட காலமாக தாமதமாகிவிட்ட கடமையாகும் என்று பிரச்சார அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.















