மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காற்று:
காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசும். காற்றின் வேகம் மணிக்கு 30-40 கி.மீ ஆக இருக்கும். மன்னார் ஊடாக காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையிலும், அம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை முதல் பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும். தீவைச் சுற்றியுள்ள ஏனைய கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
கடலின் நிலை:
மன்னார் ஊடாக காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையிலும், அம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை முதல் பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடல் பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படலாம்.
கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக சிலாபம் முதல் பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 2.0 – 2.5 மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலமான காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படலாம்.















