அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் Savannah Guthrie-யின் தாயாரான Nancy Guthrie காணாமல் போன சம்பவத்தில், ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்பட்ட மூன்று மீட்புத் தொகை (Ransom) கோரிக்கை செய்திகள் அனைத்தும் போலியானவை என அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான Federal Bureau of Investigation (FBI) தெரிவித்துள்ளது.
84 வயதான நான்சி குத்ரி கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நான்சி குத்ரி காணாமல் போன பின்னர், இரண்டு மீட்புத் தொகை கோரும் செய்திகள் ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டன. பின்னர் வெளியான மூன்றாவது செய்தியில், அவரை கடத்தியவர்கள் யார் என்பது தெரியும் எனக் கூறப்பட்டிருந்தது.
அவற்றில் ஒரு செய்தி பிரபல பொழுதுபோக்கு செய்தி இணையதளம், அதில் பல மில்லியன் டொலர் மதிப்பிலான கிரிப்டோகரன்சி தொகை கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நான்சியின் மகளான சவன்னா குத்ரி, தாயாரை மீட்பதற்காக பணம் செலுத்தத் தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.
எனினும், இந்த அனைத்து தகவல் பரிமாற்றங்களும் உண்மையானவை அல்ல என எப்.பி.ஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நான்சி குத்ரியின் காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அவரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

















