பிரித்தானிய அரசாங்கம் புதிய பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தை வெளியிட்டுள்ளது.
இதற்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாது எனக்கூறி முந்தைய பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி (John Healey) பதவி விலகிய நிலையில், அவருக்குப் பதிலாகப் பொறுப்பேற்ற டான் ஜார்விஸ் (Dan Jarvis) திறைசேரியிடமிருந்து மேலதிகமாக 1.5 பில்லியன் பவுண்டுகளைப் பெற்றுள்ளார்.
இதன் மூலம் பாதுகாப்புப் படைகளுக்கான ஒட்டுமொத்த கூடுதல் நிதி 15 பில்லியன் பவுண்டுகளாக உயர்ந்துள்ளது.
இருப்பினும், இதில் 10.3 பில்லியன் மட்டுமே தற்போதைக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள 4.7 பில்லியன் பவுண்டுகளை, வரும் இலையுதிர் கால வரவுசெலவுத் திட்டத்தில் திரட்ட வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
பதவியிலிருந்து விலகும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்குப் பிறகு, பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஆன்டி பர்ன்ஹாம் (Andy Burnham), இந்த நிதியியல் பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டிய கடினமான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
பாதுகாப்புத் துறைக்கான மேலதிக நிதிக்காக, மற்ற அரசுத் துறைகளில் நிதி வெட்டுக்கள் மேற்கொள்ளப்படலாம் என்பதால், புதிய பிரதமரின் முதல் சவாலாக இதுவே பார்க்கப்படுகிறது.















