கனடாவின் வான்கூவரில் வியாழக்கிழமை இரவு (இலங்கை நேரப்படி இன்று காலை) நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கிண்ணப் போட்டியில் சுவிட்சர்லாந்து அணி அல்ஜீரியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
பிரீல் எம்போலோ மற்றும் டான் என்டோய் ஆகியோர் ஆட்டத்தின் இரு பாதிகளிலும் சுவிட்சர்லாந்து அணிக்காக கோல் அடித்தனர்.
போட்டியின் 10 ஆவது நிமிடத்தில் எம்போலோ சுவிட்சர்லாந்திற்கு முன்னிலையை பெற்றுத் தர, இரண்டாவது பாதி தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே டான் என்டோய் அந்த முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.
முதல் சுற்றில் இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு சமநிலையுடன் ‘ குழு பி’ (Group B) பிரிவில் முதலிடம் பிடித்திருந்த சுவிட்சர்லாந்து, இந்த முடிவின் மூலம் இத்தொடரில் தனது தோல்வியடையாத நிலையைத் தக்கவைத்துக் கொண்டது.
வரலாற்றில் நான்காவது முறையாகக் காலிறுதிக்கு முன்னேறும் நோக்கத்துடன், எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று அதே மைதானத்தில் கொலம்பியா அல்லது கானா அணியை சுவிட்சர்லாந்து எதிர்கொள்ளவுள்ளது.














