பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் Muhammad Ali, 6ஆவது இலங்கை – பாகிஸ்தான் ஆயுதப்படைகள் பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், பாதுகாப்புத் தலைமையக வளாகத்திலுள்ள பாதுகாப்பு அமைச்சில், பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளரை அன்புடன் வரவேற்ற பாதுகாப்புச் செயலாளர் அவருடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது, நடைபெற்று வரும் இலங்கை–பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடல், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, இராணுவப் பரிமாற்றங்கள், பயிற்சி வாய்ப்புகள் மற்றும் பரஸ்பர மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட பரஸ்பர அக்கறைக்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பாக கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.












