• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
2 ஆவது போட்டி சமனிலை; இலங்கையை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது மே.இ.தீவுகள்!

2 ஆவது போட்டி சமனிலை; இலங்கையை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது மே.இ.தீவுகள்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/08
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த நான்கு ஆண்டுகளில் தனது சொந்த மண்ணிலான டெஸ்ட் தொடர் வெற்றியை மேற்கிந்தியத்தீவுகள் அணி முதன் முறையாக உறுதி செய்துள்ளது.

அன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் செவ்வாயன்று (06) நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி, மழையால் பாதிக்கப்பட்டு விறுவிறுப்பற்ற முறையில் சமநிலையில் முடிவடைந்ததையடுத்து மேற்கிந்தியத்தீவுகள் அணி இந்த மகத்தான பெருமையை பெற்றது.

முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் அடிப்படையில் படுதோல்வி அடைந்ததால், தொடரை சமன் செய்ய வெற்றி தேவைப்பட்ட நிலையில், இலங்கை அணி மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை 251 ஓட்டங்களுக்கு ஒன்பது விக்கெட்டுகள் இழந்து டிக்ளேர் செய்தனர். 

இதன் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக வெல்ல 302 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை மேற்கிந்தியத்தீவுகளுக்கு இலங்கை நிர்ணயித்தது.

இருப்பினும், மேற்கிந்தியத் தீவுகளின் தொடக்க ஜோடியான ஜோன் கேம்ப்பெல் மற்றும் பிராண்டன் கிங் ஆகியோர் ஆட்டமிழக்காமல் 89 ஓட்டங்கள் சேர்த்தனர். 

முதலில் ஒரு சிறு தூறலாலும், பின்னர் நீண்ட நேரம் நீடித்த மழையாலும் பாதிக்கப்பட்ட இந்த ஜோடியின் இணைப்பாட்டம் 109 ஓட்டங்களுடன் நிறைவுக்கு வந்தது.

கேம்ப்பெல் மற்றும் கிங் ஆகிய இருவரும் தலா 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

போட்டியின் இந்த முடிவுகளுடன் இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை மேற்கிந்தியத்தீவுகள் அணி 1:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

சொந்த மண்ணில் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் இறுதி டெஸ்ட் தொடர் வெற்றி, 2022-ல் பங்களாதேஷுக்கு எதிரான 2-0 என்ற கணத்திலான அபார வெற்றியாகும்.

அப்போது இவ்விரு மைதானங்களிலும், பின்னர் செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சம்மி மைதானத்திலும் அந்த அணி எளிதாக வெற்றி பெற்றது.

இலங்கைக்கு எதிராக அவர்கள் கடைசியாகத் தொடரை வென்றது 2003-ல் சொந்த மண்ணில் நடைபெற்ற இதே போன்ற இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில்தான்.

அதில் அவர்கள் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.

Image

Related

Tags: 2nd TestSri LankaWest Indiesஇலங்கைடெஸ்ட்மேற்கிந்தியத்தீவுகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் புதிய அரசு ஆர்வம்!

Next Post

நீர்கொழும்பிலிருந்து அங்குனுகொலபெலஸ்ஸாவிற்குச் சென்ற ஒரு கைதியும் உயிரிழப்பு !

Related Posts

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!
இலங்கை

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

2026-08-16
நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!
இலங்கை

நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

2026-08-16
ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்றுச் சாதனை படைத்தது பங்களாதேஷ்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
கிரிக்கெட்

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்றுச் சாதனை படைத்தது பங்களாதேஷ்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

2026-08-16
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

கினிகத்ஹேனையில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டுச் சென்று விபத்து: சாரதிகள் கைது!

2026-08-16
நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!
இலங்கை

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியாவிற்கு முதலிடம்: சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தகவல்!

2026-08-16
டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய நிதியுதவியுடன் ‘வோல்பெக்கியா’ பாக்டீரியா திட்டம்!
இலங்கை

டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய நிதியுதவியுடன் ‘வோல்பெக்கியா’ பாக்டீரியா திட்டம்!

2026-08-16
Next Post
கட்டுப்பாட்டை மீறிய மோதல் – உயிரிழப்பு 26 ஆக அதிகரிப்பு!

நீர்கொழும்பிலிருந்து அங்குனுகொலபெலஸ்ஸாவிற்குச் சென்ற ஒரு கைதியும் உயிரிழப்பு !

நீர்கொழும்பு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கருப்புப் பட்டி அணிந்து போராட்டம்!

பாகிஸ்தான் கடற்பரப்பில் மாயமான கார்கோ விமானம்!

பாகிஸ்தான் கடற்பரப்பில் மாயமான கார்கோ விமானம்!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.