முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச, முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஹொரணை அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான அருண வருணஹெந்திகே ஆகியோரை ஜூலை 28 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) அண்மையில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், இன்று (17) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்னவின் மனைவியிடமிருந்து குறித்த சந்தேக நபர்கள் 120 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் இவர்கள் கடந்த ஜூன் 25 அன்று கைது செய்யப்பட்டனர்.
‘ஹரக் கட்டா’ தடுப்புக் காவலில் இருந்தபோது அவருக்குச் சலுகைகளை வழங்குவதற்காக இந்த பணம் பெறப்பட்டதாக சந்தே கநபர்களுக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.











