16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குக் கட்டுப்பாடுகளை விதிக்க வியட்நாம் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிடுவது, பதிலளிப்பது போன்றவற்றை அவர்கள் செய்வதைத் தடைசெய்ய வியட்நாம் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட விதிகளின்படி, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் தகவல்களை உள்ளிட்டு மட்டுமே சமூக ஊடகக் கணக்குகளைப் பதிவு செய்ய முடியும்.
உலகெங்கிலும் உள்ள பல நாடுகள், சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
















