புதிய மக்கள் முன்னணித் தலைவர் சுகீஸ்வர பண்டாரவை அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டது.
இரண்டு ஊதியங்கள் பெற்று அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே அவர் இன்று நீதிமன்றில் முன்னிலை படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.















