நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “சேயோன்”.
பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கும் இத்திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் மதுரையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
மதுரை படப்பிடிப்பை முடித்துக் கொண்டு தற்போது சிவகார்த்திகேயன் ஊட்டிக்குச் சென்றுள்ளார்.
அங்கே இயற்கை சூழலில் அமைதியாக ஓய்வெடுப்பது போன்ற சில புகைப்படங்களைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “ஒரு சிறிய இடைவெளி.., ஒரு தென்றல் காற்று.., கொஞ்சம் அமைதி..” என்றும் பதிவிட்டுள்ளார்.
மதுரையைத் தொடர்ந்து ‘சேயோன்’ படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கவுள்ளதால் சிவகார்த்திகேயன் அங்கு சென்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில், தனது பதிவில் “சிறிய இடைவெளி” என்று குறிப்பிட்டுள்ளதால் அவர் குடும்பத்துடன் ஓய்வெடுக்கச் சென்றுள்ளாரோ என்றும் ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யமான விவாதங்கள் எழுந்துள்ளன.

















