கிளிநொச்சி வடமாகாண விளையாட்டு கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத் தொகுதியின் புனரமைப்பின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
ரூபா 28 மில்லியன் செலவில் முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் நீச்சல் தடாகத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மேலும் மேம்படுத்தப்பட்டு, வட மாகாண விளையாட்டு வீரர்கள் மற்றும் இளைஞர்களுக்கான நவீன பயிற்சி வசதிகள் உருவாக்கப்படவுள்ளன.

குறித்த நிகழ்வில் விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமாரகமகே பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார். மேலும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன்,உதவி மாவட்டச்செயலர்,பிரதம பொறியியலாளல், Clean Srilanka செயலணியின் மாவட்ட இணைப்பாளர் மருங்கன் மோகன், , அரச அதிகாரிகள், விளையாட்டுத்துறை அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இத்திட்டம் நிறைவடைந்த பின்னர், கிளிநொச்சி மற்றும் வட மாகாணத்தின் விளையாட்டு அபிவிருத்திக்கு புதிய ஊக்கத்தை வழங்குவதுடன், தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான பயிற்சிகள் மற்றும் போட்டிகளை நடத்துவதற்கான வசதிகளும் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.














