Lanka Metro Transit நிறுவனம், கொழும்பு நகரையும் அதன் புறநகர் பகுதிகளையும் இணைக்கும் வகையில் 7 புதிய பேருந்து வழித்தடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய வழித்தட வலையமைப்பின் மூலம், நகர மற்றும் புறநகர் மக்களுக்கு மேலும் திறமையான, வசதியான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பொதுப் போக்குவரத்து சேவையை வழங்குவதே நோக்கமாகும் என்று போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
புதிய பேருந்து வழித்தடங்கள்:
- மாகும்புர ➜ புறக்கோட்டை (23.3 கி.மீ.)
- மில்லேனியம் சிட்டி ➜ கொழும்பு கோட்டை (22.3 கி.மீ.)
- கடவத்தை ➜ மாகும்புர (34.8 கி.மீ.)
- தெமட்டகொட ➜ பாணந்துறை (28.7 கி.மீ.)
- பத்தரமுல்லை ➜ ஏகல (29.9 கி.மீ.)
- கொள்ளுப்பிட்டி சுற்றுப்பாதை சேவை (14 கி.மீ.)
- கெஸ்பேவா ➜ புறக்கோட்டை (35.7 கி.மீ.)
இந்த புதிய சேவைகள், கொழும்பு மாநகரப் பகுதியில் பயண நேரத்தை குறைத்து, மக்களுக்கு எளிதான போக்குவரத்து வசதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.















