இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியானது 165 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
காலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் 372 என்ற கடினமான ஓட்ட இலக்கினை துரத்திய இலங்கை அணியானது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 206 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இலங்கை அணி சார்பில் அதிபடியாக சோனல் தினுஷ 84 ஓட்டங்களையும், அணித் தலைவர் தனஞ்சய டிசில்வா 59 ஓட்டங்களையும் எடுத்தனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் மானவ் சுதார் 55 ஓட்டங்களுக்கு ஆறு விக்கெட்டுகளை அதிகபடியாக கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலமாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1:0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
தொடரின் இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 23 ஆம் திகதி கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகும்.














