வெப்பமான வானிலை நிலவுவது குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (23) மாலை 4.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (24) மாலை 4.00 மணி வரை செல்லுபடியாகும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் சில இடங்களில் பகல் நேரங்களில் உடல் வெப்பநிலை அல்லது வெப்பக் குறியீடு ‘கவனம்’ என்ற அளவை எட்டக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், வெப்பமான வானிலை நிலவுவதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.














