ஹம்பாந்தோட்டை நகரின் முன்னாள் மேயரான 57 வயதுடைய எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, திம்பிரிகஸ்யாயாவில் உள்ள ஒரு வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது மரணத்திற்கான சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.














