• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அமரர் வி. தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று தாவடியில் அனுஷ்டிப்பு

அமரர் வி. தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று தாவடியில் அனுஷ்டிப்பு

Hanushya P by Hanushya P
2026/09/02
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவருமான அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று (02) காலை யாழ்ப்பாணம் தாவடியில் நடைபெற்றது.

1985 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி தாவடி பகுதியில் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொ*ல்லப்பட்ட அமரர் வி. தர்மலிங்கத்தின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் அன்னாரின் புதல்வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் அவரது பாரியார் இணைந்து நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சுடர்கள் ஏற்றப்பட்டதுடன் நிகழ்வில் கலந்துகொண்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் மலரஞ்சலி செலுத்தினர்.

அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கம் 1918 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி யாழ்ப்பாணம் கந்தரோடையில் விஸ்வநாதர் – சரஸ்வதி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.
சிறுவயது முதலே சமூக சேவையில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த அவர் தனது அரசியல் மற்றும் சமூகப் பணியின் பயணத்தை உள்ளூராட்சி மட்டத்திலிருந்து ஆரம்பித்தார். உடுவில் கிராம சபையின் தலைவராக ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்ட அவர் ஐந்துக்கும் மேற்பட்ட தடவைகள் தொடர்ச்சியாக அப்பதவியை வகித்தார். பின்னர் சுன்னாகம் பட்டின சபையின் தலைவராகவும் பணியாற்றினார்.

1960 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவான அவர்இ 1983 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்தார். தான் போட்டியிட்ட தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றுஇ உடுவில் – மானிப்பாய் தொகுதி மக்களின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாக விளங்கினார்.
தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய அமரர் வி. தர்மலிங்கம்,  இலங்கை நாடாளுமன்றத்தில் ஐந்து தடவைகள் அங்கம் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமரர் தர்மலிங்கத்தின் புதல்வருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்,  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம்இ ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா,  வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராசா,  வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன்,  உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Related

Tags: Amarar Viswanathar DharmalingamJaffnaJaffna – The 41st anniversaryParliamentThavadi
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம்!

Next Post

ஐசிசியின் அண்மைய தரவரிசையில் சமரி அதபத்து முன்னேற்றம்!

Related Posts

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!
இலங்கை

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

2026-09-14
UPDATE : வெளியேறினார் நாமல்
இலங்கை

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

2026-09-14
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !
இலங்கை

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

2026-09-14
தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்; இருவர் கைது!
இலங்கை

தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்; இருவர் கைது!

2026-09-14
பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 05 பேர் உயிரிழப்பு!
இலங்கை

பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 05 பேர் உயிரிழப்பு!

2026-09-14
எரிபொருள் விலை மாற்றம் குறித்து மாத இறுதியில் முடிவு!
இலங்கை

எரிபொருள் விலை மாற்றம் குறித்து மாத இறுதியில் முடிவு!

2026-09-14
Next Post
ஐசிசியின் அண்மைய தரவரிசையில் சமரி அதபத்து முன்னேற்றம்!

ஐசிசியின் அண்மைய தரவரிசையில் சமரி அதபத்து முன்னேற்றம்!

அமெரிக்க – இலங்கை கூட்டு நடவடிக்கையில் முறியடிக்கப்பட்ட சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு! 

அமெரிக்க – இலங்கை கூட்டு நடவடிக்கையில் முறியடிக்கப்பட்ட சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு! 

ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோ சடலமாக மீட்பு!

ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோ சடலமாக மீட்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

0
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

0
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

0
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

0
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.