வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 ரக துப்பாக்கி ஒன்று, உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய கைக்குண்டு ஒன்று மற்றும் BMG வகையைச் சேர்ந்த 6 தோட்டங்களுடன் சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவின் உத்தியோகத்தர்கள் குழுவொன்றுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக, நேற்று (12) கந்தானேகெதர, வலகும்புரமுல்ல பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்று பரிசோதிக்கப்பட்டபோது இந்தத் துப்பாக்கி உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, வலகும்புரமுல்ல, குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.













