2026/27 வடக்கத்திய குளிர்காலப் பருவத்தினை முன்னிட்டு போலந்தின் வார்சா மற்றும் கொழும்புக்கு இடையே வாராந்திர திட்டமிடப்பட்ட சார்ட்டர் (charter) சேவையை ஸ்மார்ட்விங்ஸ் (Smartwings) விமான நிறுவனம் தொடங்கவுள்ளது.
இந்த சேவைகளானது எதிர்வரும் டிசம்பர் 22 அன்று தொடங்கும்.
இச்சேவை போயிங் 737 மேக்ஸ் 8 (Boeing 737 MAX 8) விமானத்தைப் பயன்படுத்தி, ஓமனின் மஸ்கட் வழியாக (தொழில்நுட்ப ரீதியான நிறுத்தத்துடன்) இயக்கப்படும்.
இந்தச் சேவை வாரத்திற்கு ஒருமுறை, செவ்வாய்க்கிழமைகளில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.













