2026.09.12 அன்று கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியில் தெல்கந்த சந்திக்கு அருகில் போக்குவரத்து சமிக்ஞையை மீறி சட்டவிரோதமான முறையில் பஸ் வண்டியொன்று செலுத்தப்படும் காட்சிகள் அடங்கிய காணொளியொன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
சிவப்பு நிற போக்குவரத்து சமிக்ஞை ஒளிர்ந்து கொண்டிருந்த நிலையில், குறித்த பஸ் வண்டியை சந்தியிலிருந்து இடதுபுறமாகச் செல்லும் வீதிக்குள் செலுத்தி, அந்த வீதியூடாக போக்குவரத்து சமிக்ஞையை கடந்து சென்று, பின்னர் மீண்டும் பிரதான வீதிக்குள் அபாயகரமானதும் சட்டவிரோதமானதுமான முறையில் பஸ் வண்டியை செலுத்தும் காட்சி குறித்த காணொளியில் தெளிவாகக் காணப்படுகின்றது.
இது தொடர்பாக குறித்த பஸ் வண்டியின் உரிமையாளரை மிரிஹான பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவிற்கு அழைத்து, அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு மிரிஹான பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன், குறித்த பஸ் வண்டியை செலுத்திய சாரதியை மூன்று நாட்களுக்குள் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தி, அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சாரதி சட்டவிரோத போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளாரா என்பதைக் கண்டறிவதற்காக போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அபாயகரமான முறையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவரை கௌரவ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.













