• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/18
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை நாட்டவரான சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கடும் கவலை வெளியிட்டுள்ளதுடன், அவரது உயிரைக் காப்பாற்ற அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இவ்வழக்கை வெளியுறவு அமைச்சகம் கையாண்ட விதம் மற்றும் மேல்முறையீட்டுச் செயல்முறை தொடர்பான தூதரகப் பொறுப்புக்கூறல் குறித்து கேள்வி எழுப்பி, அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் இவிவகாரத்தை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் எக்ஸில் பதிவிட்டுள்ள அவர்,

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற இலங்கை அரசாங்கம் உடனடியாக உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.
இந்த விடயம் தொடர்பில் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளேன். குறிப்பாக, அனோஜனின் மேல்முறையீட்டு நடவடிக்கையை வெளிவிவகார அமைச்சும் இலங்கைத் தூதரகமும் எவ்வாறு கையாண்டன என்பது தொடர்பில் அரசாங்கத்திடம் தெளிவான பதில்களை கோருவேன்.
அனோஜன் ஆரம்பத்தில் சவுதி அரேபியாவின் அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றத்தினால் பேஸ்புக் கருத்தொன்றுடன் தொடர்புபட்ட வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 30 இலட்சம் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டிருந்தார்.
அப்போது, வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு, இந்தத் தீர்ப்புக்கு எதிராக 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய முடியும் என அவரது குடும்பத்தினருக்கு அறிவித்திருந்தது.
ஆனால் அதே நேரத்தில், ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் பெற்ற சட்ட ஆலோசனையில், இந்த மேல்முறையீட்டின் மூலம் தண்டனையை குறைப்பதற்கோ அல்லது தீர்ப்பை மாற்றுவதற்கோ வாய்ப்பு மிகவும் குறைவு என மதிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அனோஜனின் குடும்பத்தினர் ஏற்கனவே மதத் தலைவர்களின் ஊடாக மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு மற்றும் கருணை நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர்.
எனினும், குடும்பத்தினர் என்னைச் சந்தித்ததல்ல; அவர்கள் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவர்களைச் சந்தித்ததன் பின்னர் வழங்கப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து சட்டச் செலவுகளுக்காக கோரப்பட்ட ரூ. 1,890,766 தொகையை வெளிவிவகார அமைச்சின் செயலாளருடன் தொடர்புடையதாக அடையாளப்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கில் குடும்பத்தினர் செலுத்தியுள்ளனர்.
இப்போது எனது முக்கியமான கேள்வி இதுதான்:
தூதரகத்தின் சட்ட ஆலோசனையிலேயே மேல்முறையீட்டின் வெற்றிக்கான வாய்ப்பு மிகவும் குறைவு என தெரிவிக்கப்பட்டிருந்தால், குடும்பத்தினருக்கு மேல்முறையீடு செய்ய ஏன் அறிவுறுத்தப்பட்டது?
மேலும், குடும்பத்தினர் மேல்முறையீடு செய்யத் தீர்மானித்த பின்னர், அவர்கள் செலுத்திய பெருந்தொகையான சட்டக் கட்டணத்திற்கு எதிராக அரசாங்கம் எந்த வகையான பொறுப்பையும் மேற்பார்வையையும் மேற்கொண்டது என்பதும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
அமைச்சினால் பின்னர் வழங்கப்பட்ட ஆவணங்களின்படி, 24 ஆகஸ்ட் 2026 அன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் குடும்பத்தினரின் கூற்றுப்படி, அவர்கள் அதற்கு முன்னரே மேல்முறையீடு செய்யுமாறு கோரியிருந்தனர். அதேவேளை, அமைச்சு மேல்முறையீட்டு ஆவணத்தை குடும்பத்தினருக்கு அனுப்பிய கடிதம் 16 செப்டெம்பர் 2026 எனத் திகதியிடப்பட்டுள்ளது.
இந்த காலதாமதம் குறித்தும் அரசாங்கம் விளக்கம் வழங்க வேண்டும்.
அதேபோன்று, மேல்முறையீட்டு ஆவணத்தில் அட்டர்னி அட்லான் அப்துல்லா அல்-சுபை என்பவர் சட்டத்தரணியாக குறிப்பிடப் பட்டுள்ளார். ஆனால் குடும்பத்தினரின் கூற்றுப்படி, நீதிமன்றத்தில் வேறொரு சட்டத்தரணியே முன்னிலையாகியுள்ளார்.
அந்த சட்டத்தரணி யார்?, அவரை யார் நியமித்தார்கள்?, அவருக்கு யார் அறிவுறுத்தல் வழங்கினார்கள்? அவரது தொடர்பு விபரங்கள் ஏன் குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை? இந்தக் கேள்விகளுக்கும் வெளிவிவகார அமைச்சு பதிலளிக்க வேண்டும்.
எனவே, அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் நான் பின்வரும் விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்திடம் பதில் கோர உள்ளேன்:
தூதரகத்தின் சொந்த சட்ட ஆலோசனையில் மேல்முறையீட்டின் வெற்றிக்கான வாய்ப்பு மிகவும் குறைவு என மதிப்பிடப்பட்டிருந்தும், குடும்பத்தினருக்கு ஏன் மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது?
மேல்முறையீடு செய்வதால் ஏற்படக்கூடிய சட்ட மற்றும் மனிதாபிமான அபாயங்கள் தொடர்பில் என்ன மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது?
நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணியை யார் தேர்ந்தெடுத்தார்கள்?
அந்த சட்டத்தரணிக்கு யார் அறிவுறுத்தல் வழங்கினார்கள்?
மேல்முறையீட்டு ஆவணங்கள் மற்றும் சட்டத்தரணியின் முழுமையான விபரங்கள் குடும்பத்தினருக்கு ஏன் முறையாக வழங்கப்படவில்லை?
குடும்பத்தினர் செலுத்திய ரூ. 1,890,766 சட்டக் கட்டணம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது?
இந்த முழு நடவடிக்கையிலும் வெளிவிவகார அமைச்சும் இலங்கைத் தூதரகமும் மேற்கொண்ட மேற்பார்வை என்ன?
இந்த வழக்கை கையாள்வதில் தூதரக அல்லது இராஜதந்திர ரீதியில் ஏதேனும் தவறு ஏற்பட்டதா?
எனினும், இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பெறுவது முக்கியமானதாக இருந்தாலும், அதைவிட முக்கியமானது தற்போது சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதுதான்.
17 செப்டெம்பர் அன்று வெளியான செய்திகளின்படி, மேல்முறையீட்டு நீதிமன்றம் அனோஜனுக்கு மரண தண்டனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தொடர்பில் சவுதி அரேபிய அதிகாரிகளிடமிருந்து அதிகாரப்பூர்வமான தீர்ப்பின் முழுமையான பிரதியையும் வழக்கு நடவடிக்கைகளின் பதிவுகளையும் இலங்கை அரசாங்கம் உடனடியாக பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதனுடன் நிறுத்திக்கொள்ளாமல், சவுதி அரேபிய சட்ட நடைமுறைகளை நன்கு அறிந்த, அனுபவமிக்க மற்றும் சுயாதீனமான சட்டத்தரணியின் சட்ட உதவியை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும்.
கிடைக்கக்கூடிய அனைத்து சட்டரீதியான மேல்முறையீட்டு மற்றும் மறுஆய்வு வாய்ப்புகளையும் ஆராய வேண்டும்.
அதேவேளை, மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு மற்றும் மரண தண்டனையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
இது ஒரு சாதாரண தூதரக நடவடிக்கையாக கருதப்படக்கூடிய விடயம் அல்ல. ஒரு இலங்கைப் பிரஜையின் உயிர் தொடர்பான விடயம்.
எனவே, வெளிவிவகார அமைச்சர் இந்த விடயத்தில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சருடன் நேரடியாக தொடர்புகொள்ள வேண்டும்.
தேவைப்பட்டால், சவுதி அரேபிய இராச்சியத்தின் மிக உயர்ந்த பொருத்தமான மட்டத்தில் இலங்கை அரசாங்கம் தலையீட்டை கோர வேண்டும்.
இந்த மேல்முறையீடு எவ்வாறு கையாளப்பட்டது என்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு பதிலளிக்க வேண்டிய தீவிரமான கேள்விகள் உள்ளன.
இந்த விடயங்களை நான் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்.
குடும்பத்தினர் அமைச்சின் ஊடாக வழங்கப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் மேல்முறையீடு செய்ய முன்வந்திருந்தால், மேலும் அவர்கள் கோரப்பட்ட சட்டக் கட்டணத்தையும் செலுத்தியிருந்தால், அந்த மேல்முறையீட்டு நடவடிக்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் குடும்பத்தினருக்கு உரிய தகவல்களை வழங்குவதும், அனோஜனுக்கு போதுமான சட்ட உதவி கிடைப்பதை உறுதி செய்வதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
ஆனால் தற்போது பொறுப்புக்கூறல் தொடர்பான கேள்விகள் காரணமாக அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அவசர நடவடிக்கைகள் எந்தவிதத்திலும் தாமதிக்கக் கூடாது.
ஒரு இலங்கைப் பிரஜையின் உயிர் ஆபத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படும் இந்தச் சூழ்நிலையில், சட்ட, இராஜதந்திர, தூதரக மற்றும் மனிதாபிமான ரீதியாக கிடைக்கக்கூடிய ஒவ்வொரு வழியையும் அரசாங்கம் உடனடியாக பயன்படுத்த வேண்டும்.
சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், தேவையான மிக உயர்ந்த மட்டத்தில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன் – என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, மத நிந்தனைக் குற்றச்சாட்டின் பேரில், இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியான சிவராசா அனோஜன் என்பவருக்கு சவுதி அரேபிய மேல்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாகத் தெரிகிறது.

இருப்பினும், இச்சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் எதுவும் இன்னமும் வெளியாவில்லை.

Image

Image

Related

Tags: AnojanSAUDI ARABIAShanakiyan Rasamanickamசவுதி அரேபியாசாணக்கியன் இராசமாணிக்கம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

Next Post

‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள்!

Related Posts

‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள்!
இலங்கை

‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள்!

2026-09-18
செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!
ஆசிரியர் தெரிவு

செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

2026-09-18
நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

2026-09-18
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!
JUST IN

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

2026-09-18
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!
இலங்கை

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
இலங்கை

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

2026-09-18
Next Post
‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள்!

‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள் 

‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள் 

0
அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

0
செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

0
நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

0
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

0
‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள் 

‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள் 

2026-09-18
அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

2026-09-18
செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

2026-09-18
நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

2026-09-18
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

2026-09-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.