தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கலனிகம மற்றும் தொடங்கொட ஆகிய இடங்களுக்கு இடையே ஒரு வாகன விபத்து ஏற்பட்டுள்ளது.
மத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றிற்கும், வேறு பல வாகனங்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதன் விளைவாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தைத் தொடர்ந்து 10-க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வேனுடன் மோதி விபத்துக்குள்ளானது, இதைத் தொடர்ந்து அப்பேருந்தின் பின்னால் வந்த பல வாகனங்கள் ஒன்றன்மீது ஒன்று மோதிக்கொண்டன.
இரண்டு பேருந்துகள் மற்றும் ஆறு கார்கள் உட்பட பல வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தைத் தொடர்ந்து, காலியிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள் தொடங்கொட வெளியேறும் வழித்தடத்தின் வழியாகத் திருப்பிவிட பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.













