மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தெமட்டகொட சிரிதம்ம மாவத்தையில் வைத்து 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நான்கு ‘T-Kata’ ரக துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள், தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவின் மகனான ‘மலிஷ’ என்பவருக்குச் சொந்தமானவை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.













