பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டது.
இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதிலும், குற்றம் சாட்டப்பட்டவரான ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
இந்த நிலையிலேயே அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.













