அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப் பட்டி (seat belt) தொடர்பான விதிகளை மீறியதற்காக 2,000-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 19 ஆம் திகதி முதல் இன்று வரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டன.
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்களில் ஆசனப் பட்டிகள் இருந்தும், அவற்றைப் பயன்படுத்தாத சுமார் 1,000 பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தது.
ஒவ்வொரு அதிவேக நெடுஞ்சாலைகளிலும் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களிலும் அனைத்து வாகனங்களும் தொடர்ந்து சோதிக்கப்பட்டு வருவதாக அதிவேக நெடுஞ்சாலைகளின் போக்குவரத்துப் பாதுகாப்புப் பிரிவு கூறியது.
செயல்படும் நிலையில் உள்ள இருக்கை பட்டைகள் பொருத்தப்படாத எந்தவொரு வாகனமும் அதிகவே நெடுஞ்சாலைகளில் நுழைய அனுமதிக்கப்படாது என்றும் பொலிஸார் வலியுறுத்தினர்.
தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த சோதனைகளின்போது, பயணிகள் போக்குவரத்துப் பேருந்துகள் மீதும் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.













