அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வன்னியார் வீதியிலுள்ள வீடு ஒன்றில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்று வந்த இருதயநாதர் அம்றிதன் (வயது 19) என்ற மாணவன் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.
இச்சம்பவம் குறித்துப் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த மாணவன் நள்ளிரவு வரை பாண்டிருப்புப் பகுதியைச் சேர்ந்த தனது காதலியான சக பாடசாலை மாணவியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.அதன் பின்னர், தனது பணப்பையில் இருந்த காதலியின் புகைப்படத்தை அறையில் காட்சிப்படுத்திய மாணவன், தனது கையை வெட்டியுள்ளார். இதன்போது ஏற்பட்ட அதிக இரத்தப்போக்குடன், தனது தாயாரின் சேலையின் உதவியால் வீட்டின் வெளியில் உள்ள மேல் தளத்தில் தூக்கில் தொங்கியுள்ளார். அத்துடன், தூக்கில் தொங்கும்போது ஏற்படும் சத்தம் வெளியில் கேட்காமல் இருப்பதற்காகத் துணியொன்றையும் தனது வாயில் திணித்துள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவிக்கின்றார்.
இச்சம்பவம் தொடர்பில் கல்முனைத் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.















