அஜித்தின் திரைப்படங்கள் வெளியாகும்போது, கதைக்களம் மற்றும் நடிகர் கூட்டணி எவ்வாறு அமைந்திருந்தாலும், அவரது ரசிகர்கள் பெரும் ஆதரவை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், நீண்ட காலமாகப் புதிய திரைப்படங்களில் அஜித்தைக் காண முடியாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரபல நடிகர்களின் கூட்டணி இல்லாத திரைப்படங்களாக இருந்தாலும், அஜித் தனது விருப்பத்திற்கேற்ப நடித்த படங்களுக்கும் தாம் ஆதரவளித்ததாகக் குறிப்பிடும் சில ரசிகர்கள், தற்போது அவர் சிற்றூந்து பந்தயத்தில் கவனம் செலுத்துவதால் தங்களது எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.
மேலும், சிற்றூந்து பந்தய நிகழ்வுகளின்போது ரசிகர்களுடன் அவர் நடந்துகொண்ட விதம் குறித்தும் சிலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், “நாங்க எங்க குடும்பத்தைப் பார்க்கணும் தல” எனக் கூறி, அஜித் ரசிகர்கள் அதிருப்தி வெளியிட்டு வரும் கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.

















