இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (09) நடைபெறவுள்ளது.
இந்த போட்டி உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு, பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் இதுவரை நடைபெற்றுள்ள 30 டி20 சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் அணி 18 போட்டிகளிலும், இலங்கை அணி 12 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.
சர்வதேச டி20 தரவரிசையில் இலங்கை அணி 221 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் அணி 240 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

















