ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள இராணுவ தளம் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று கனடாவின் தற்காப்பு அமைச்சர் சனிக்கிழமை (17) தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் தீ விபத்தில் காயமடைந்த பலர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனேடியப் படைகளின் வெய்ன்ரைட் தளத்தையும் தாண்டி, சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளுக்குள் கடும் காற்று தீப்பிழம்புகளைச் சுழற்றி அடித்ததால், தீயணைப்புப் படையினர் நள்ளிரவில் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர தீவிரமாகப் போராடினர்.
இந்த சம்பவத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்பது உடனடியாகத் தெரியவரவில்லை.
,ராணுவத் தளத்திற்கு அருகிலுள்ள வெய்ன்ரைட் (Wainwright) நகரில் சுமார் 7,000 குடியிருப்பாளர்கள் வசிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து nuhயல் கனடிய மவுண்டட் பொலிஸார் (Royal Canadian Mounted Police) விசாரணை நடத்தி வருகின்றனர்.
















