பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையிலும், கட்சியின் செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதுடன் தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு பிரம்மாண்டமான மக்கள் பேரணி ஒன்றை நடத்துவதற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சிறைவாசம் அனுபவித்து வருகின்ற போதிலும் கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் எந்தவிதமான பலவீனமும் அவதானிக்கப்படவில்லை.
நாமல் ராஜபக்ச சிறையில் இருப்பதால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வீழ்ச்சியடைந்துவிட்டது என்றும் கட்சியின் அமைப்புக்கட்டமைப்பு சீர்குலைந்துவிட்டது என்றும் சில அரசியல் கட்சிகளும் சில தரப்பினரும் நினைக்கக்கூடும்.
எனினும், சிறையில் இருந்தவாறே நாமல் ராஜபக்ச கட்சியின் பொதுச்செயலாளர், பிரமுகர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் தொடர்ச்சியாக வழங்கி வருகிறார்.
இதன் மூலம் கட்சியின் செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதும் உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் குறைபாடுகளை மக்களுக்குச் சுட்டிக்காட்டும் தேவையான பிரம்மாண்டமான வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாமல் ராஜபக்ச தலைமையில் நடைபெறவிருந்த தொகுதி ரீதியான கூட்டங்கள் அவர் இல்லாத சந்தர்ப்பத்திலும் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் தலைமையில் அடுத்த வாரம் முதல் நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் ஆரம்பிக்கப்பட சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், தொகுதி மட்டங்களுக்கு மேலதிகமாக அநுராதபுரத்தில் நடத்தப்பட்ட மக்கள் பேரணிக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத வகையில், தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு பிரம்மாண்டமான மக்கள் பேரணி ஒன்றை நடத்துவதற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.















