தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், திருவுருவச் சிலை தொடர்பாக வாக்குமூலம் பதிவுசெய்ய இன்று காலை 10மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு சென்றுள்ளார்.
தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலையானது நல்லூரடியில் உள்ள அவரது நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அது யாழ்ப்பாணம் பொலிஸாரால் அகற்றப்பட்டது.
இந்நிலையில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக செல்வராஜா கஜேந்திரனை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் அழைத்திருந்தனர். இவ்வாறான பின்னணியிலேயே அவர் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக சென்றார்.














