மெக்சிகோவில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் தினத்தை முன்னிட்டு, சிஹுவாவா (Chihuahua) இன நாய்கள் வித்தியாசமான வேடமணிந்து அணிவகுத்து அனைவரையும் கவர்ந்துள்ளன.
மெக்சிகோ நகரின் சப்புல்டெபெக் பூங்காவில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிறிய ரக நாய்கள் பாரம்பரிய எலும்புக்கூடு வேடங்கள், அஸ்டெக் மன்னர்களின் ஆடைகள் மற்றும் போகிமான் கதாபாத்திரங்களின் வேடங்கள் எனப் பல்வேறு அலங்காரங்களுடன் பங்கேற்றன.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நாய்களின் உரிமையாளர்கள், தங்களது செல்லப்பிராணிகளுடன் நேரத்தைச் செலவிடுவதற்கும், அதே இனத்தைச் சேர்ந்த ஏனைய நாய்களுடன் பழகுவதற்கும் இத்தகைய நிகழ்வுகள் சிறந்த வாய்ப்பாக அமைவதாகத் தெரிவித்தனர்.
மெக்சிகோவில் நவம்பர் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் அனுஷ்டிக்கப்படும் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் தினம், அந்த நாட்டின் முக்கியமான கலாசார விழாக்களில் ஒன்றாகும்.
இந்த நாளில், உயிரிழந்த உறவினர்களையும் அன்புக்குரியவர்களையும் நினைவுகூர்ந்து மக்கள் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுப்பது குறிப்பிடத்தக்கது.

















