அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த’ஜென்னி’ (Jenny) என்ற பெண் குதிரை, உலகின் மிக நீளமான வால் கொண்ட குதிரை என்ற புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.
இந்த குதிரையின் உரிமையாளரான மெக்கன்சிக்கு கடந்த 2019-ம் ஆண்டில் அவரது 13-வது பிறந்தநாளின் போது பரிசாகக் கிடைத்த குதிரை இதுவாகும்.
கடந்த ஜூலை 25 அன்று கின்னஸ் அதிகாரிகள் முன்னிலையில் அளவிடப்பட்ட போது, ஜென்னி குதிரையின் வால் 13 அடி 6 அங்குலம் (சுமார் 4.12 மீற்றர்) நீளம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இது சராசரி மனிதனின் உயரத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
வாலின் நீளம் குறையாமலும், சேதமடையாமலும் இருக்க கடந்த 7 ஆண்டுகளாக வாரத்திற்கு இரண்டு முறை அதனைத் தனித்துவமாகக் கழுவி, பின்னலிட்டு, சிறப்புப் பைகளில் வைத்து உரிமையாளர்கள் பாதுகாத்து வந்துள்ளனர்.















