• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ்ப்பாணத்தில் நெடுந்தூரப் பேருந்துச் சேவைகள் மீள ஆரம்பம்!

யாழ்ப்பாணத்தில் நெடுந்தூரப் பேருந்துச் சேவைகள் மீள ஆரம்பம்!

Long-distance bus services resume in Jaffna!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/10/27
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கண்காணிப்பின் கீழ், இணைந்த நேர அட்டவணைக்கு அமைவான நெடுந்தூரப் பேருந்துச் சேவைகளை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (27.10.2026) செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். யாழ்ப்பாண நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, நகரின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு அனைத்துப் போக்குவரத்துச் சேவை வழங்குநர்களும் இப்பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை முன்னெடுப்பது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை மீள ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஆளுநரை, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.
நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், பல ஆண்டுகளுக்கு முன்னர் திறக்கப்பட்ட இந்தப் பேருந்து நிலையம், அதன் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் இதுவரை முழுமையாகச் செயற்படவில்லை எனக் குறிப்பிட்டார். யாழ்ப்பாண நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல், சுகாதாரச் சீர்கேடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைக் கருத்தில்கொண்டே அனைத்துத் தரப்பினரதும் இணக்கத்துடன் இந்தப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வராமை தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்ததுடன், அது தொடர்பில் நீதிமன்றம் உத்தரவுகளையும் பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவுகளுக்கு அமைவாகவே இன்று இங்கிருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படுவதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாண நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு இப்பேருந்து நிலையம் முழுமையாகச் செயற்படுவது அவசியம் எனத் தெரிவித்த ஆளுநர், போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் அனைத்துத் தரப்பினரும் இணைந்த நேர அட்டவணைக்கு அமைவாக இங்கிருந்து சேவைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு இணங்கிச் செயற்படாத தரப்புக்களுக்கு எதிராக உரிய பொறிமுறையின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவரிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், மாண்புமிகு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பத்து நகரங்களை அபிவிருத்தி செய்வதற்குத் திட்டமிட்டுள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகரங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண நகரம் அபிவிருத்தி செய்யப்படும்போது பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் எனவும், பல தசாப்தங்களுக்கு முன்னர் காணப்பட்ட தூய்மையான நகரச் சூழலை மீண்டும் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன், நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாகவே இன்றைய தினம் சேவைகள் ஆரம்பிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். இதற்கு அமைவாக தயாரிக்கப்பட்ட இணைந்தநேர அட்டவணையில் தொடர்புடைய இரு தரப்பினரும் கையெழுத்திட்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார். எனவே, இச்சேவைகளை முன்னெடுப்பதற்கு இணங்க மறுக்கும் தரப்புக்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாம்பசிவம் சுதர்சன், கௌரவ மாநகர சபை உறுப்பினர்கள், வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
blank
blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழக சிறையில் பரபரப்பு – 17 கைதிகள் தப்பியோட்டம்!

Next Post

இலங்கைக்கான தனது விமான சேவைகளை மீண்டும் தொடங்கிய எடெல்வைஸ் ஏர்!

Related Posts

இலங்கைக்கான தனது விமான சேவைகளை மீண்டும் தொடங்கிய எடெல்வைஸ் ஏர்!
இலங்கை

இலங்கைக்கான தனது விமான சேவைகளை மீண்டும் தொடங்கிய எடெல்வைஸ் ஏர்!

2026-10-27
இராணுவத்தின் உதவியுடன் மன்னார், கூராயில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 70 குடும்பங்களைச் சேர்ந்த 163 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றல்!
இலங்கை

இராணுவத்தின் உதவியுடன் மன்னார், கூராயில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 70 குடும்பங்களைச் சேர்ந்த 163 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றல்!

2026-10-27
புதிய உலக அரங்கில் நிலைத்திருக்க இலங்கைக்கு மாற்றம் அவசியம் – ரணில் எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

புதிய உலக அரங்கில் நிலைத்திருக்க இலங்கைக்கு மாற்றம் அவசியம் – ரணில் எச்சரிக்கை!

2026-10-27
பேஸ்லைன் வீதி அபிவிருத்திப் பணிகளில் தாமதம் – கொழும்பு மாநகர சபை விளக்கம்!
இலங்கை

பேஸ்லைன் வீதி அபிவிருத்திப் பணிகளில் தாமதம் – கொழும்பு மாநகர சபை விளக்கம்!

2026-10-27
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட O/L மாணவர்களுக்கு மாற்றுத் திகதி!
இலங்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட O/L மாணவர்களுக்கு மாற்றுத் திகதி!

2026-10-27
சிறைவாசத்தின் 50ஆவது நாள் – நாமல் ராஜபக்ஷ விசேட அறிக்கை!
இலங்கை

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் நாமல் ராஜபக்ஷ!

2026-10-27
Next Post
இலங்கைக்கான தனது விமான சேவைகளை மீண்டும் தொடங்கிய எடெல்வைஸ் ஏர்!

இலங்கைக்கான தனது விமான சேவைகளை மீண்டும் தொடங்கிய எடெல்வைஸ் ஏர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
இலங்கைக்கான தனது விமான சேவைகளை மீண்டும் தொடங்கிய எடெல்வைஸ் ஏர்!

இலங்கைக்கான தனது விமான சேவைகளை மீண்டும் தொடங்கிய எடெல்வைஸ் ஏர்!

0
யாழ்ப்பாணத்தில் நெடுந்தூரப் பேருந்துச் சேவைகள் மீள ஆரம்பம்!

யாழ்ப்பாணத்தில் நெடுந்தூரப் பேருந்துச் சேவைகள் மீள ஆரம்பம்!

0
தமிழக சிறையில் பரபரப்பு – 17 கைதிகள் தப்பியோட்டம்!

தமிழக சிறையில் பரபரப்பு – 17 கைதிகள் தப்பியோட்டம்!

0
புதிய உலக அரங்கில் நிலைத்திருக்க இலங்கைக்கு மாற்றம் அவசியம் – ரணில் எச்சரிக்கை!

புதிய உலக அரங்கில் நிலைத்திருக்க இலங்கைக்கு மாற்றம் அவசியம் – ரணில் எச்சரிக்கை!

0
பேஸ்லைன் வீதி அபிவிருத்திப் பணிகளில் தாமதம் – கொழும்பு மாநகர சபை விளக்கம்!

பேஸ்லைன் வீதி அபிவிருத்திப் பணிகளில் தாமதம் – கொழும்பு மாநகர சபை விளக்கம்!

0
இலங்கைக்கான தனது விமான சேவைகளை மீண்டும் தொடங்கிய எடெல்வைஸ் ஏர்!

இலங்கைக்கான தனது விமான சேவைகளை மீண்டும் தொடங்கிய எடெல்வைஸ் ஏர்!

2026-10-27
யாழ்ப்பாணத்தில் நெடுந்தூரப் பேருந்துச் சேவைகள் மீள ஆரம்பம்!

யாழ்ப்பாணத்தில் நெடுந்தூரப் பேருந்துச் சேவைகள் மீள ஆரம்பம்!

2026-10-27
தமிழக சிறையில் பரபரப்பு – 17 கைதிகள் தப்பியோட்டம்!

தமிழக சிறையில் பரபரப்பு – 17 கைதிகள் தப்பியோட்டம்!

2026-10-27
இராணுவத்தின் உதவியுடன் மன்னார், கூராயில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 70 குடும்பங்களைச் சேர்ந்த 163 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றல்!

இராணுவத்தின் உதவியுடன் மன்னார், கூராயில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 70 குடும்பங்களைச் சேர்ந்த 163 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றல்!

2026-10-27
புதிய உலக அரங்கில் நிலைத்திருக்க இலங்கைக்கு மாற்றம் அவசியம் – ரணில் எச்சரிக்கை!

புதிய உலக அரங்கில் நிலைத்திருக்க இலங்கைக்கு மாற்றம் அவசியம் – ரணில் எச்சரிக்கை!

2026-10-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: