இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளுக்கு பனிமூட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் பயணத் தாமதங்கள் ஏற்படக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தக் கடும் பனிமூட்ட எச்சரிக்கை காலை 10 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சில இடங்களில் பனிமூட்டம் பிற்பகல் வரை நீடிக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.















