களனி பல்கலைக்கழகத்தில் உள்ள பெண் மாணவர் விடுதி ஒன்றின் அறையில் இன்று (03) காலை தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், குறித்த விடுதியின் அறையில் தங்கியிருந்த மாணவர்களின் உடைமைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகின.
தீ விபத்து ஏற்பட்டபோது அந்த அறையில் மாணவர்கள் யாரும் இல்லை; யாருக்கும் காயமும் ஏற்படவில்லை.
தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.















