நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
மேல், சபரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
காற்று:
நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் காற்று வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும் அல்லது திசைகள் மாறி வீசக்கூடும். காற்றின் வேகம் மணிக்கு 20-30 கி.மீ ஆக இருக்கும்.
கடல் நிலை:
நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் மிதமான நிலையில் காணப்படும்.
இடியுடன் கூடிய மழையின் போது, தற்காலிகமாக பலத்த காற்று (மணிக்கு 60-70 கி.மீ வேகத்தில்) வீசக்கூடும் மற்றும் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம்.














